Oct 18, 2026
Thisaigal NewsYouTube

பண்டமாரான், பங்களா வீட்டில் நடந்த கொள்ளை / 10 பேரும் வளைத்துப்பிடிக்கப்பட்டனர்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பண்டமாரான், பங்களா வீட்டில் நடந்த கொள்ளை / 10 பேரும் வளைத்துப்பிடிக்கப்பட்டனர்

கிள்ளான்,அக்டோபர் 07-

கடந்த சில ஆண்டுளாக சிலாங்கூரிலும், நெகிரி செம்பிலானிலும் பாராங்கை ஆயுதமேந்திய நிலையில் வீடு புகுந்து கொள்ளையடித்து வந்த மிக ஆபத்தானவர்கள் என்று நம்பப்படும் ஒரு கொள்ளைக் கும்பலை தாங்கள் வெற்றிகரமான முறியடித்துள்ளதாக சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ உசேன் உமர் கான் தெரிவித்துள்ளார்.

கடந்த வியாழக்கிழமை அதிகாலையில் கிள்ளான், பண்டமாரானில் உள்ள ஓர் இந்தியருக்கு சொந்தமான பங்களா வீட்டில் நடந்த ஆயதமேந்திய துணிகர கொள்ளைச்சம்பபவத்தில் ஈடுபட்டதாக நம்பப்படும் 10 ஆடவர்களும் பிடிபட்டுள்ளனர்.

இந்த கொள்ளைக்கும்பல் மிகவும் ஆபத்தானவர்கள் என்று நம்பப்படுகிறது. தாங்கள் கொள்ளையடிக்கும் வீடுகளை குறிப்பாக எளிதாக நுழையக்கூடிய வீடுகளை முன்கூட்டியே அடையாளம் கண்ட பின்னர் கொள்ளையில் ஈடுபட்டு வந்துள்ளது.

சம்பந்தப்பட்ட கும்பல் பிடிபட்டது மூலம் அந்த பங்களா வீட்டிலிருந்து களவாடப்பட்ட விலை உயர்ந்த சாமி சிலைகள் உட்பட பல பொருட்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

ஒரு பெண் உட்பட 10 பேருக்கு எதிராக கடந்த அக்டேபார் 3 ஆம் தேதி தொடங்கப்பட்ட Op Casa நடவக்கையின் மூலம் பிடிபட்டுள்ளனர். 23 க்கும் 46 க்கும் இடைப்பட்ட வயதுடைய அவர்கள் தற்போது தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருவதாக டத்தோ ஹுசைன் ஓமர் குறிப்பிட்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →