அலோர் ஸ்டார், நவம்பர்.22-
கெடா, பாலிங்கில் நேற்று நிகழ்ந்த தீ விபத்தில் சேதமுற்ற தேசியப்பள்ளி, விரைவில் சீரமைக்கப்படும் என்று மாநில கல்வி இலாகா அறிவித்துள்ளது. தீ விபத்துக்கான காரணங்கள் ஆராயப்பட்டு வரும் வேளையில் சேதமுற்ற வகுப்பறைகளின் கட்டமைப்பு தற்போது மதிப்பீடு செய்யப்பட்டு வருவதாக இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் கல்வி இலாகா தெரிவித்துள்ளது.
இத்தீ விபத்தில் வகுப்பறைகள், நிர்வாக அறைகள், கழப்பறைகள் சேதமுற்றுள்ளன. வகுப்பறைகள் சீரமைக்கப்படும் வரையில் ஒரு குறுகிய கால நடவடிக்கையாக மாணவர்கள் வீட்டிலிருந்து PdPR எனும் இயங்கலை மூலம் கல்வி கற்பர் என்று அது தெரிவித்துள்ளது.








