இரண்டாம் உலகப் போரின் போது, சயாம் - பர்மா ரயில் இருப்புப் பாதை அமைக்கும் பணிக்கு ஜப்பானியர்களால் கிட்டத்தட்ட இரண்டரை லட்சம் ஆசிய தொழிலாளர்கள் வலுக்கட்டாயமாக கொண்டுச்செல்லப்பட்டனர். இவர்களில் அதிகமானோர் மலாயாவில் ரப்பர் மற்றும் தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்த தமிழர்கள் ஆவர் என்கிறார் சயாம் - பர்மா ரயில் பாதை இயக்கத்தின் தலைவர் பொ. சந்திர சேகர்.
தாய்லாந்து, காஞ்சனா பூரியில் உள்ள நினைவுத் தூணில், தமிழர்கள் நேரடியாக ஈடுப்பட்ட ஒரு வரலாற்றுக் குறிப்பைப் பதிவு செய்யும் நோக்கில், அங்குள்ள நினைவுத் தூணில் ஒரு பகுதியைச் சீரமைத்து அதன் தொடக்க விழா வரும் ஜூன் 3 ஆம் தேதி நடைபெற விருக்கிறது.
இந்தப் பயணத்தில் பங்கேற்க விரும்புகின்றவர்கள் தங்களுடன் தொடர்புக்கொள்ளலாம் அல்லது தாய்லாந்து, காஞ்சனா பூரிக்கு நேரடியாக வரலாம் என்று சந்திர சேகர் கூறுகிறார்.
தொடர்புக்கு 017-888 7221








