கோலாலம்பூர், டிசம்பர்.22-
11 வயது மாணவரைப் பாலியல் வன்கொடுமை செய்ததாக சமயப் பள்ளி ஆசிரியர் ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில், இவ்வழக்கு தொடர்பாக மேலும் 6 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.
அந்த மாணவரைத் தவிர வேறு யாரும் அப்பள்ளியில் பாதிக்கப்பட்டுள்ளார்களா? உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணைகள் நடைபெற்று வருவதாக கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ ஃபாடில் மார்சுஸ் தெரிவித்துள்ளார்.
கடந்த டிசம்பர் 19-ஆம் தேதி, கைது செய்யப்பட்ட அந்த 40 வயதான சமயப் பள்ளி ஆசிரியர், தற்போது தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
கம்போங் பாண்டானில் உள்ள சமயப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வந்த அந்த நபருக்கு, இதற்கு முன்பு எந்த ஒரு குற்றப் பின்னணியும் இல்லை என்பதையும் ஃபாடில் மார்சுஸ் உறுதிப்படுத்தியுள்ளார்.








