ஆறாண்டுகளுக்கு முன்பு ஜொகூர் பாருவில், சாலை ஓரத்தில் பெரும் கும்பலாக இருந்த சிறார்களைக் காரினால் மோதித் தள்ளி, எண்மருக்கு மரணம் விளைவித்த குற்றத்திற்காக ஆறாண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட பெண் குமாஸ்தா ஒருவரை புத்ராஜெயா அப்பீல் நீதிமன்றம் இன்று விடுதலை செய்தது.
மிக அபாயக்கரமாக காரைச் செலுத்தியதற்காக ஆறாண்டு சிறைத் தண்டனையும், 6 ஆயிரம் வெள்ளி அபராதமும் விதிக்கப்பட்ட பெண் குமாஸ்தாவான சம் கெ திங்கிற்கு எதிரான சிறைத் தண்டனையையும் அபராதத்தையும் ரத்து செய்வதாக மூவர் அடங்கிய நீதிபதிகள் குழுவிற்கு தலைமை ஏற்ற நீதிபதி ஹடாரியா சைட் இஸ்மாயில் தெரிவித்தார்.
2017 ஆம் ஆண்டு பிப்ரவரி 18 ஆம் தேதி, அதிகாலை 3 மணியளவில், கைக்கால்களை நீட்டிக்கொண்டு, சைக்கிளில் படுத்தவாறு சவாரி செய்யும் 'பசிகால் லாஜாக்' சாகசத்தில் பங்குக்கொண்டதாக நம்பப்படும் சிறார்கள் சம்பந்தப்பட்ட இந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்ததுடன் மேலும் ஆறு பேர் கடுமையான காயங்களுக்கு ஆளாகினர்.
இவ்வழக்கில், பெண் குமாஸ்தா சம் கெ திங்கை ஜொகூர் பாரு, மஜிஸ்திரேட் நீதிமன்றம் விடுதலை செய்த போதிலும், உயர் நீதிமன்றம் அவருக்கு ஆறாண்டு சிறைத் தண்டனையும் அபராதமும் விதித்தது.
இத்தண்டனையை எதிர்த்து அந்தப் பெண் குமாஸ்தா மேல் முறையீடு செய்தார். அதிகாலை நேரத்தில், சாலையில் சிறார்களுக்கு என்ன வேலை? என்ற கேள்வி இவ்வழக்கில் முதன்மையாக வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

Related News

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

ஜனவரி முதல் சரவாக்கில் ஏர் போர்னியோ-வின் புதிய விமானச் சேவை


