Jan 11, 2026
Thisaigal NewsYouTube
ரிங்கிட்டின் அதிரடி மீட்சி: அடுத்த 6 மாதங்களில் 1 அமெரிக்க டாலர், 4.00 ரிங்கிட் என்ற நிலையை எட்டும் - பொருளாதார நிபுணர்கள் கணிப்பு
தற்போதைய செய்திகள்

ரிங்கிட்டின் அதிரடி மீட்சி: அடுத்த 6 மாதங்களில் 1 அமெரிக்க டாலர், 4.00 ரிங்கிட் என்ற நிலையை எட்டும் - பொருளாதார நிபுணர்கள் கணிப்பு

Share:

கோலாலம்பூர், ஜனவரி.10-

மலேசியப் பொருளாதாரத்திற்கு வலுசேர்க்கும் விதமாக, வரும் ஜூன் மாதத்திற்குள் மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு ஓர் அமெரிக்க டாலருக்கு எதிராக 4.00 ரிங்கிட் என்ற வலிமையான நிலையை எட்டும் என்று முன்னணி பொருளாதார ஆய்வகங்கள் மற்றும் நிதி நிறுவனங்கள் கணித்துள்ளன.

மலேசியாவின் டிஜிட்டல் மற்றும் பசுமை எரிசக்தி துறைகளில் ஏற்பட்டுள்ள பில்லியன் கணக்கிலான அந்நிய நேரடி முதலீடுகள், ரிங்கிட்டின் தேவையை உலக சந்தையில் அதிகரித்துள்ளன.

அமெரிக்காவின் ஃபெடரல் ரிசர்வ் வங்கி தனது வட்டி விகிதங்களைக் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், முதலீட்டாளர்களின் கவனம் மலேசியா போன்ற ஆசிய சந்தைகளை நோக்கித் திரும்பியுள்ளது.

'மலேசியாவிற்கு வருகை தரும் ஆண்டு 2026 திட்டத்தின் தொடக்கம், கணிசமான அந்நியச் செலாவணியை நாட்டிற்குள் கொண்டு வரும் என்பதால், இது ரிங்கிட்டின் மதிப்பை மேலும் வலுப்படுத்தும் என்று அவை கூறுகின்றன.

Related News