Sep 6, 2026
Thisaigal NewsYouTube
நூருல் இஸ்ஸாவின் விடுப்பு தேர்தல் பணிகளை பாதிக்காது – பிகேஆர் இளைஞர் அணி
தற்போதைய செய்திகள்

நூருல் இஸ்ஸாவின் விடுப்பு தேர்தல் பணிகளை பாதிக்காது – பிகேஆர் இளைஞர் அணி

Share:

பிகேஆர் துணைத் தலைவர் நூருல் இஸ்ஸா அன்வார் தற்காலிக விடுப்பில் இருப்பது, மாநிலத் தேர்தல் மற்றும் 16ஆவது பொதுத் தேர்தலுக்கான கட்சியின் ஆயத்தப் பணிகளை பாதிக்காது என்று பிகேஆர் இளைஞர் அணித் தலைவர் காமில் முனிம் தெரிவித்துள்ளார்.

துணைத் தலைவரின் பொறுப்புகளை இடைக்காலமாக டத்தோ ஸ்ரீ சைஃபுதீன் நசுத்தியோன் இஸ்மாயில் ஏற்றுள்ள நிலையில், தேர்தல் இயக்குநராக டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தொடர்ந்து செயல்படுவார் என்றும் அவர் கூறினார்.

கட்சியை வலுப்படுத்துவதிலும், தேர்தல்களுக்குத் தயாராவதிலும் பிகேஆர் தொடர்ந்து கவனம் செலுத்தும் என்று கமில் தெரிவித்தார்.

நூருல் இஸ்ஸா, முனைவர் பட்டப் படிப்பைத் தொடர்வதற்காக தேசிய மாநாட்டுக்குப் பின்னர் தற்காலிக விடுப்பு கோரியிருந்தார். அவரது பதவி விலகல் கோரிக்கையை தலைவர் மன்றம் நிராகரித்து, படிப்பில் கவனம் செலுத்த தற்காலிக விடுப்பு வழங்கியது.

கட்சியின் இந்த முடிவை இளைஞர் அணியினர் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் கமில் கூறினார்.

Related News

சிரம்பான் குடியிருப்புப் பகுதியில் போலீஸ் துப்பாக்கிச் சூடு: போதைப்பொருள் வழக்கில் சந்தேக நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்

சிரம்பான் குடியிருப்புப் பகுதியில் போலீஸ் துப்பாக்கிச் சூடு: போதைப்பொருள் வழக்கில் சந்தேக நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்

அதிகரித்து வரும் புகைமூட்டம்: சிலாங்கூரில் பொதுமக்களுக்கு முககவசங்கள் விநியோகிக்க மாநில அரசு முடிவு

அதிகரித்து வரும் புகைமூட்டம்: சிலாங்கூரில் பொதுமக்களுக்கு முககவசங்கள் விநியோகிக்க மாநில அரசு முடிவு

மீட்கப்பட்ட மலாயன் புலி யோங் சோ சிகிச்சைக்குப் பின் மீண்டும் வனப் பகுதிக்குள் விடப்பட்டது

மீட்கப்பட்ட மலாயன் புலி யோங் சோ சிகிச்சைக்குப் பின் மீண்டும் வனப் பகுதிக்குள் விடப்பட்டது

ஜோகூரில் தெருநாய்களால் தாக்கப்பட்ட 2 வயது சிறுமி பலத்த காயம் - போலீஸ் விசாரணை

ஜோகூரில் தெருநாய்களால் தாக்கப்பட்ட 2 வயது சிறுமி பலத்த காயம் - போலீஸ் விசாரணை

சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளி புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா - கல்வி அமைச்சர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது

சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளி புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா - கல்வி அமைச்சர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது

எரிமலை வெடிப்பு: மலேசியா - ஜகார்த்தா இடையில் 30-க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து

எரிமலை வெடிப்பு: மலேசியா - ஜகார்த்தா இடையில் 30-க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து