18 க்கும் 20 க்கும் இடைப்பட்ட வயதுடைய இளையோர்கள் அல்லது உயர்கல்விக்கூடங்களில் முழு நேரமாக பயில்கின்ற மாணவர்கள் அரசாங்கத்திடமிருந்து 200 வெள்ளி கிரெடித் தொகையை பெறுவதற்கு வரும் ஜுன் 26 ஆம் தேதி திங்கட்கிழமை ஈபெலியா ரஹ்மா திட்டத்திற்கான பதிவு தொடங்கவிருக்கிறது.
2005 ஆண்டிலிருந்து 2023 ஆம் ஆண்டு வரை 18 க்கும் 20 க்கும் இடைப்பட்ட வயதை பூர்த்தி அடைந்த அனைத்து மலேசியப் பிரஜைகளும் 200 வெள்ளியை பெறுவதற்கு தங்களை பதிவு செய்து கொள்ளலாம் என்று நிதி அமைச்சு வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஈபெலியா ரஹ்மா திட்டத்திற்கான பதிவு காலக்கட்டம் வரும் ஜுன் 26 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் மாதம் 22 ஆம் தேதி வரை இரண்டு மாதங்களாகும். இந்த 200 வெள்ளி ஈபெலியா ரஹ்மா விற்கு அப்பாற்பட்ட நிலையில் மின்னணு பணப்பையான ஈ-வாலட் டிலும் வவுச்சர் வடிவில் கூடுதல் தொகை நிரப்பப்படும்.
ஈபெலியா ரஹ்மா திட்டத்திற்காக பிரதமரும் நிதி அமைச்சருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் 40 கோடி வெள்ளி நிதியை ஒதுக்கீடு செய்துள்ளார். இத்திட்டத்தில் 20 லட்சம் இளையோர்கள் மற்றும் உயர்கல்விக்கூட மாணவர்கள் பயன்பெறுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போதைய செய்திகள்
ஜுன் 26 ஆம் தேதி திங்கட்கிழமை ஈபெலியா ரஹ்மா திட்டத்திற்கான பதிவு தொடங்கவிருக்கிறது.
Related News

ஆல்பெர்ட் தே கைது நடவடிக்கை மீதான காணொளியை வெளியிடுவீர்

ஒழுங்கீன நடவடிக்கைகள்: நடப்பு சட்டம் ஆராயப்படும்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரணம் ஒரு கொலையே

அம்பாங்கில் கும்பல் தாக்குதலில் மூவர் காயம்

பிரதமர் தலைமையில் ஏழாவது தேசிய நீர் மன்றக் கூட்டம்


