Dec 3, 2025
Thisaigal NewsYouTube
சபா, சரவாக்கில் 53 பள்ளிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன - கல்வியமைச்சு தகவல்!
தற்போதைய செய்திகள்

சபா, சரவாக்கில் 53 பள்ளிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன - கல்வியமைச்சு தகவல்!

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.17-

சபா மற்றும் சரவாக் மாநிலங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்வி சார்ந்த அமைப்புகளின் நலன்களை உறுதிச் செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

இன்று புதன்கிழமை, காலை 8 மணி நிலவரப்படி, சபா மற்றும் சரவாக்கில் மொத்தம் 53 கல்வி நிறுவனங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவற்றில், சபாவில் 24 தொடக்கப் பள்ளிகளும், 5 மேல்நிலைப் பள்ளிகளும், சரவாக்கில் 22 தொடக்கப் பள்ளிகளும், 2 மேல்நிலைப் பள்ளிகளும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன எனக் கூறப்பட்டுள்ளது.

Related News