கோலாலம்பூர், நவம்பர்.23-
அடுத்த ஆண்டு முதல், 16 வயதுக்குட்பட்டவர்கள் சமூக ஊடகக் கணக்குகளைத் தொடங்குவதற்குத் தடை விதிக்க அரசாங்கம் இலக்கு வைத்துள்ளதாகத் தகவல் தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபாமி ஃபாட்சீல் தெரிவித்துள்ளார். பாலின வேட்டையாடிகள் உட்பட பல்வேறு வயது வரம்பிற்குரிய இணையக் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கவே இந்தத் தடை விதிக்கப்படும் என்று அமைச்சரவை முடிவு செய்துள்ளதாக அவர் கூறினார்.
இந்தத் தடையை உறுதிப்படுத்த, ஆஸ்திரேலியா போன்ற பிற நாடுகள் செயல்படுத்தும் பொது வயது வரம்பு அமலாக்க வழிமுறைகளை அரசாங்கம் ஆய்வு செய்து வருகிறது. மைகாட், கடப்பிதழ், மைடிஜிட்டல் ஐடி போன்ற அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஆவணங்களைக் கொண்டு eKYC சரிபார்ப்பைக் கட்டாயமாக்குவது இந்தத் தளங்களுக்கான சாத்தியமான நடைமுறைகளில் ஒன்றாகும் என்றும் அமைச்சர் ஃபாமி நம்பிக்கைத் தெரிவித்தார்.








