கோலாலம்பூர், ஆகஸ்ட்.22-
உணவகம் உட்பட 10 தொழில் துறைகளுக்கு அந்நியத் தொழிலாளர்களை எடுப்பதற்கு நீண் இடைவெளிக்கு பிறகு அனுமதி அளித்து இருக்கும் உள்துறை அமைச்சின் முடிவை பிரிமாஸ் எனப்படும் மலேசிய இந்திய உணவக உரிமையாளர்கள் சங்கம் வரவேற்றுள்ளது.
உள்துறை அமைச்சின் இந்த அறிவிப்பானது நாட்டில் இந்திய உணவகங்களில் நிலவி வரும் கடும் தொழிலாளர் பற்றாக்குறை பிரச்னைக்குத் தீர்வு காண முடியும் என்று சங்கத்தின் தலைவர் டத்தோ கோவிந்தசாமி சுரேஸ் நம்பிக்கை தெரிவித்தார்.
நாட்டில் உள்ள இந்திய உணவகங்களில் வேலை செய்ய இன்னும் 7,500 அந்நியத் தொழிலாளர்கள் தேவைப்படுகிறார்கள் என்று டத்தோ கோவிந்தசாமி சுரேஸ் குறிப்பிட்டார்.








