லோரி ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து, சாலையை விட்டு விலகி மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் அதன் ஓட்டுநர் உயிரிழந்தார். இச்சம்பவம், நேற்று இரவு 9.35 மணியளவில் வடக்கு தெற்கு நெடுஞ்சாலையின் 71.6 ஆவது கிலோ மீட்டரில் ஜோகூர், குளுவாங்கிற்கு அருகில் நிகழ்ந்தது. 54 வயதுடைய அந்த லோரி ஓட்டுநர், ஜோகூரிலிருந்து கோலாலம்பூரை நோக்கி வந்து கொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக குளுவாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி பாஹ்ரின் முஹமாட் நோ தெரிவித்தார். தலையிலும், உடலிலும் கடும் காயங்களுக்கு ஆளாகிய அந்த ஓட்டுநர், சம்பவ இடத்திலேயே மாண்டதாக பஹ்ரின்ம முகமட் நோ குறிப்பிட்டார்.

Related News

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

டிசம்பர் 30-ஆம் தேதி முதல் மாயமான எம்எச்370 விமானத்தை தேடும் பணிகள் மீண்டும் துவக்கம்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரண விசாரணை புக்கிட் அமானிடம் ஒப்படைப்பு

நீதிபதிகளுக்கு பதவி நியமனக் கடிதங்கள் ஒப்படைப்பு

கேஎல்ஐஏ 1-இல் 14 கிலோவுக்கும் அதிகமான போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது


