கோலாலம்பூர், செப்டம்பர்.27-
மலேசிய திரைப்பட மேம்பாட்டு வாரியமான ஃபினாஸ், மறுசீரமைக்கப்பட்டது மூலம் உள்ளூர் திரைப்படத் துறைக்குப் பாரபட்சமின்றி நியாயமான வாய்ப்புகளை வழங்கும் என்பதுடன் , வெளிப்படையான சூழலை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தொடர்புத்துறை அமைச்சர் டத்தோ ஃபாமி ஃபாட்சீல் நம்பிக்கை தெரிவித்தார்.
ஃபினாஸ் வாரியத்தை ஒரே கும்பல் ஆக்கிரமித்துக்கொண்டு இருக்கும் ஆரோக்கியமற்ற கார்ட்டல் முறைக்கு இது முற்றுப்புள்ளி வைக்கும் என்று டத்தோ ஃபாமி குறிப்பிட்டார்.
மலேசியத் திரைப்பட மேம்பாட்டு வாரியத்தில் ஆரோக்கியமற்ற நடைமுறைகளைத் தடுப்பதற்கான அரசாங்கத்தின் உறுதியான முயற்சியே இந்த சீரமைப்பாகும் என்று டத்தோ ஃபாமி விளக்கினார்.








