மறைந்த துன் டாக்டர் சித்தி ஹஸ்மாவின் பிரிவால் துயரத்தில் இருக்கும் முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீருக்கு, பொதுமக்களும் ஊடகங்களும் போதிய தனிமையையும் அவகாசத்தையும் வழங்க வேண்டும் என்று அவரது மகன் டத்தோஸ்ரீ முக்ரிஸ் மகாதீர் கேட்டுக் கொண்டுள்ளார்.
70 ஆண்டுகளுக்கும் மேலாக தமது மனைவியுடன் வாழ்ந்த டாக்டர் மகாதீருக்கு, அவரது மறைவு பேரிழப்பாக இருப்பதாக முக்ரிஸ் கூறினார்.
சித்தி ஹஸ்மாவின் மறைவுக்குப் பின்னர் ஒரு வாரம் கூட நிறைவடையாத நிலையில், அவரது தந்தையின் உணர்வு மற்றும் உடல்நிலையை கருத்தில் கொண்டு அவருக்கு தேவையற்ற அழுத்தம் கொடுக்க வேண்டாம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
வீட்டில் இருக்கும் ஒவ்வொரு பொருளும் மனைவியின் நினைவுகளை ஏற்படுத்துவதால், முழுமையாக குணமடையும் வரை தேசிய இருதயக் கழகத்தில் இருப்பது அவருக்கு உதவியாக இருக்கும் என்றும் முக்ரிஸ் தெரிவித்தார்.
100 வயதில் கடந்த செப்டம்பர் 28-ஆம் தேதி சித்தி ஹஸ்மா காலமானார்.








