Dec 3, 2025
Thisaigal NewsYouTube
ஸ்கேம் மோசடியில் 230,447 ரிங்கிட்டைப் பறிகொடுத்த ஆசிரியர்
தற்போதைய செய்திகள்

ஸ்கேம் மோசடியில் 230,447 ரிங்கிட்டைப் பறிகொடுத்த ஆசிரியர்

Share:

குவாந்தான், செப்டம்பர்.05-

ஸ்கேம் மோசடியில் சிக்கியதாக நம்பப்படும் குவாந்தானைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் தனது வாழ்நாள் சேமிப்பான 2 லட்சத்து 30 ஆயிரத்து 447 ரிங்கிட்டைப் பறிகொடுத்துள்ளார்.

40 வயது மதிக்கத்தக்க அந்தப் பெண் ஆசிரியர், சட்டவிரோத பண மாற்றத்தில் சம்பந்தப்பட்டுள்ளதாகவும், தற்போது விசாரிக்கப்பட்டு வருவதாகவும் தங்களைப் போலீஸ்காரர்கள் என்று ஆள்மாறாட்டம் செய்த நபர்கள், பெறும் தொகையை ஏமாற்றிப் பெற்றுள்ளனர் என்று பகாங் மாநில போலீஸ் தலைவர் யஹாயா ஒத்மான் தெரிவித்தார்.

இதன் தொடர்பில் போலீஸ் அதிகாரிகள், துணை பப்ளிக் பிராசிகியூட்டர், காப்புறுதி அதிகாரி, பேங்க் நெகாரா அதிகாரி என்று கூறிக் கொண்டு ஆள்மாறாட்டம் செய்து, அந்த ஆசிரியரைப் பயம் முறுத்தியுள்ளனர் என்று யஹாயா ஒத்மான் குறிப்பிட்டார்.

Related News