நெகிரி செம்பிலான், கோலப்பிலாவில் உள்ள நகைக்கடை ஒன்றில் தங்க ஆபரணங்களை ஒப்படைக்க வந்த இரு விநியோகிப்பாளர்களை ஆயுதமுனையில் மடக்கி, 18 லட்சம் வெள்ளி தங்க ஆபரணங்களைப் பறித்துக்கொண்டு, மின்னல் வேகத்தில் தப்பிச் சென்ற இரு முகமூடிக் கொள்ளையர்களில் ஒருவர், நேற்றிரவு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று புதன்கிழமை இரவு 10 மணியளவில், கோலப்பிலா வட்டாரத்தில் 50 வயது மதிக்கத்தக்க அந்த ஆடவர், கைதுசெய்யப்பட்டதாக மாவட்ட போலீஸ் துணை தலைவர் ஷாருல் அனுவார் அப்துல் வஹாப் தெரிவித்தார்.
அந்தச் சந்தேக பேர்வழி இன்று தொடங்கி 7 நாட்களுக்கு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு, குற்றவியல் சட்டத்தின் கீழ் விசாரணை செய்யப்படுவார் என்று ஷாருல் அனுவார் குறிப்பிட்டார்.
இக்கொள்ளைச் சம்பவம் நேற்று புதன்கிழமை காலை 11 மணியளவில், கோலப்பிலாவில் உள்ள நகைக்கடை ஒன்றில், சம்பந்தப்பட்ட நகைக்கடையின் பணியாளர்கள் வாடிக்கையாளர்களுடன் சேவையில் ஈடுபட்டிருந்த வேளையில் நிகழ்ந்தது.
நகைக்கடைசியின் பின்புறம், அந்த தங்க ஆபரணங்களை இறக்குவதற்கு ஏதுவாக இரு விநியோகிப்பாளர்கள், தங்கள் காரை நிறுத்திய போது, அவ்விடத்தில் ஏற்கனவே பதுங்கியிருந்த இரு முகமூடி கொள்ளையர்கள் இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

பிரதமர் தலைமையில் ஏழாவது தேசிய நீர் மன்றக் கூட்டம்

அந்த இந்தியப் பிரஜையின் முன்னாள் முதலாளியை ஆள்பல இலாகா விசாரணை நடத்தும்

மளிகைக்கடையில் கொள்ளையிட்டதாக போலீஸ்காரர் மீது குற்றச்சாட்டு

இன்னும் வேறு என்ன செய்யச் சொல்கிறீர்கள்? பிரதமர் அன்வார் கேள்வி

தமிழ்ப்பள்ளிகளில் திருவள்ளுவர் சிலையை அகற்ற உத்தரவிடப்பட்டதா? ஜோகூர் கல்வி இலாகா மறுப்பு


