சிரம்பான், டிசம்பர்.22-
இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஒரு கார் சம்பந்தப்பட்ட விபத்தில் இருவர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் நேற்று இரவு 9.34 மணியளவில் சிரம்பான், ஜாலான் மம்பாவில் நிகழ்ந்தது.
இதில் ஒரு ஹேண்டா கார் மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிள் சம்பந்தப்பட்டு இருந்ததாக சிரம்பான் மாவட்ட போலீஸ் தலைவர் அஸாஹார் அப்துல் ரஹிம் தெரிவித்தார். இரண்டு மோட்டார் சைக்கிள்களில் ஒன்று திடீரென்று எதிர்த்திசையில் நுழைந்தது, விபத்திற்கான காரணம் என்று ஆரம்பக் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
லாரி ஓட்டுநர்களான இரண்டு மோட்டார் சைக்கிளோட்டிகள் கடும் காயங்களுக்கு ஆளாகி சம்பவ இடத்திலேயே மாண்டனர். காரோட்டியும், பயணிகளும் எவ்வித காயமின்றி உயிர் தப்பியதாக அவர் மேலும் கூறினார்.








