Oct 9, 2026
Thisaigal NewsYouTube

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தனித்து வாழும் தாய்க்கு பிரதமர் அன்வார் உதவிக்கரம் நீட்டினார்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தனித்து வாழும் தாய்க்கு பிரதமர் அன்வார் உதவிக்கரம் நீட்டினார்

கோலாலம்பூர், ஜூன்.21-

குவாந்தான், பாலோக் வட்டாரத்தைச் சேர்ந்த குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அஸிஸா மாஹ்மூட் என்ற தனித்து வாழும் தாய்க்கு உதவிகளை வழங்கினார் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம். பிரதமரின் அரசியல் செயலாளர் டத்தோ அஹ்மாட் ஃபர்ஹான் ஃபௌஸி, ஸியாரா மடானி திட்டம் வாயிலாக இந்த உதவியை வழங்கினார்.

ஐந்து குழந்தைகளின் தாயும், துப்புரவுப் பணியாளருமான அஸிஸா, புற்றுநோய்க்கான தொடர் சிகிச்சை, மாதாந்திர உதவிப் பொருட்களுக்காக சிரமத்தை எதிர்கொண்டு வருகிறார். பிரதமரின் அலுவலகம் அவருக்குச் சுகாதாரப் பராமரிப்பு, வீட்டைப் பழுது பார்ப்பதற்கான உதவிகள் ஆகியவற்றை விரைவுபடுத்துகிறது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →