Oct 10, 2026
Thisaigal NewsYouTube

போதைப்பொருள் கடத்தல், மலேசியப் பிரஜை சிங்கப்பூரில் கைது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
போதைப்பொருள் கடத்தல், மலேசியப் பிரஜை சிங்கப்பூரில் கைது

சிங்கப்பூர், ஜூன்.17-

சிங்கப்பூருக்குள் ஒரு லட்சத்து 73 ஆயிரம் சிங்கப்பூர் டாலர் மதிப்பிலான 1.4 கிலோ ஹேரோயின் போதைப்பொருளைக் கடத்தியதாக நம்பப்படும் 30 வயது மலேசியப் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அந்த மலேசியப் பிரஜை, கடந்த சனிக்கிழமை சிங்கப்பூர் குடிநுழைவு, சோதனைச் சாவடி மையம் மற்றும் போதைப்பொருள் துடைத்தொழிப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார் என்று சிங்கப்பூர் அமலாக்கத்துறையினர் இன்று அறிவித்துள்ளனர்.

அந்த ஆடவர் பயணித்த மலேசியாவில் பதிவு செய்யப்பட்ட கார், சிங்கப்பூர் வூட்லென்ஸ் சோதனைச் சாவடி மையத்தில் கடும் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது காரின் பின்புறம், ஒரு கையுறைக்குள் அந்தப் போதைப்பொருளை அவர் மறைத்து வைத்திருந்ததாக அமலாக்கத் தரப்பினர் தெரிவித்தனர்.

அந்த நபர் கைது செய்யப்பட்டதுடன் காரும் பறிமுதல் செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →