Jan 19, 2026
Thisaigal NewsYouTube
மூன்று கோவில்கள் மூடப்படும்
தற்போதைய செய்திகள்

மூன்று கோவில்கள் மூடப்படும்

Share:

வரும் ஏப்ரல் 20 ஆம் தேதி வியாழக்கிழமை, காலை 11.04 மணிக்கு சூரியக் கிரகணம் ஆரம்பமாகி மதியம் 12.45 மணிக்கு முடிவுறும் என்பதால், கோலாலம்பூர், ஶ்ரீ மகா மாரியம்மன் கோயில் தேவஸ்தானத்தின் கீழ் உள்ள மூன்று கோயில்கள் குறிப்பிட்ட நேரத்தில் மூடப்படும் என்று தேவஸ்தானத் தலைவர் டான் ஶ்ரீ டத்தோ ஆர். நடராஜா தெரிவித்துள்ளார்.

தேவஸ்தானத்தின் கீழ் உள்ள கோலாலம்பூர், ஜாலான் புடு, கோர்ட்டுமலை ஶ்ரீ கணேசர் கோயில், கோலாலம்பூர் ஶ்ரீ மகா மாரியம்மன் கோயில் மற்றும் பத்துமலை ஶ்ரீ சுப்ரமணியர் சுவாமி கோயில் ஆகிய மூன்று கோயில்களில் ஏப்ரல் 20 ஆம் தேதி காலை 10.30 மணிக்கு நடை சாத்தப்பட்டு, மாலை 5 மணிக்கு வழக்கம் போல் ஆலயங்களின் நடை திறக்கப்பட்டு, அபிஷேகங்கள் மற்றும் பூசைகள் நடைபெறும் என்று டான் ஶ்ரீ நடராஜா அறிவித்துள்ளார்.

Related News