Jun 9, 2026
Thisaigal NewsYouTube
பூனையைக் காப்பாற்றச் சென்றவரைத் தீயணைப்பு வீரர்கள் காப்பாற்றினர்
தற்போதைய செய்திகள்

பூனையைக் காப்பாற்றச் சென்றவரைத் தீயணைப்பு வீரர்கள் காப்பாற்றினர்

Share:

பூனை ஒன்றைக் காப்பாற்ற முயன்ற 32 வயது வளர்ப்பு பிராணி பிரியர் ஒருவர், சுமார் நான்கு மீட்டர் ஆழமுள்ள சாக்கடைக் குழிக்குள் தவறி விழுந்து விபத்துக்குள்ளானார். இந்த சம்பவம் இன்று மலாக்கா, ஆயர் குரோ, தாமான் மலாக்கா பெர்டானா பகுதியில் நிகழ்ந்தது.

தனது வீட்டின் பின்புறமுள்ள புதர் பகுதியில் இருந்த பூனையைக் காப்பாற்ற முயன்றபோது, கான்கிரீட் சாக்கடை மூடியை மிதித்ததால் அவர் உள்ளே விழுந்து, வலது காலில் காயமடைந்து, எழ முடியாமல் சுமார் 30 நிமிடங்கள் உள்ளேயே சிக்கிக் கிடந்தார்.

பொதுமக்களின் தகவலின் பேரில் 14 தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து, 'ஹாலிங்' நுட்பத்தைப் பயன்படுத்தி அவரைப் பத்திரமாக மீட்டுள்ளனர். பின்னர் அவர் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக மலாக்கா தீயணைப்புத் துறையின் மக்கள் தொடர்பு அதிகாரி முகமட் ஹாபிட்சத்துல்லா ரஷித் தெரிவித்தார்.

Related News

இந்திய முஸ்லிம்களை நான் ஓரங்கட்டுவதாகக் கூறுவது தவறு:  டத்தோ அ. சிவநேசன் சாடல்

இந்திய முஸ்லிம்களை நான் ஓரங்கட்டுவதாகக் கூறுவது தவறு: டத்தோ அ. சிவநேசன் சாடல்

வாக்காளர்களே இறுதி முடிவெடுப்பார்கள்: நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் பதவிநீக்க சதி குறித்து லோக் கருத்து

வாக்காளர்களே இறுதி முடிவெடுப்பார்கள்: நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் பதவிநீக்க சதி குறித்து லோக் கருத்து

நாடாளுமன்ற விவாதப் பதிவுகளை நவீனமயமாக்க புதிய திறன்மிகு 'ஹென்செர்ட்' முறை அதிகாரப்பூர்வ ஒப்படைப்பு

நாடாளுமன்ற விவாதப் பதிவுகளை நவீனமயமாக்க புதிய திறன்மிகு 'ஹென்செர்ட்' முறை அதிகாரப்பூர்வ ஒப்படைப்பு

பினாங்கு மாக் மண்டின் இண்டா அடுக்குமாடி குடியிருப்பு சாவிகள் ஒப்படைப்பு

பினாங்கு மாக் மண்டின் இண்டா அடுக்குமாடி குடியிருப்பு சாவிகள் ஒப்படைப்பு

வர்த்தகர் ஆல்பர்ட் தே  மீது முன்னாள் எஸ்பிஆர்எம் தலைமை ஆணையர் அசாம் பாக் கி அவதூறு வழக்கு

வர்த்தகர் ஆல்பர்ட் தே மீது முன்னாள் எஸ்பிஆர்எம் தலைமை ஆணையர் அசாம் பாக் கி அவதூறு வழக்கு

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குக் கணக்கியல் வல்லுநர்களின் பங்களிப்பு அவசியம்: நிதி அமைச்சர் வலியுறுத்தல்

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குக் கணக்கியல் வல்லுநர்களின் பங்களிப்பு அவசியம்: நிதி அமைச்சர் வலியுறுத்தல்