புத்ராஜெயா, நவம்பர்.17-
மலேசிய வர்த்தகப் பேராளர்கள் குழுவிற்குத் தலைமையேற்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் நாளை நவம்பர் 18 ஆம் தேதி மூன்று ஆப்பிரிக்க நாடுகளுக்குப் பயணமாகிறார்.
புதிய பொருளாதாரம் மற்றும் முதலீடுகளை ஆராய்வதற்கு ஆப்பிரிக்க நாடுகளான எத்தியோப்பியா, தென்னாப்பிரிக்கா மற்றும் ஏண்ஆஆ ஆகிய மூன்று நாடுகளுக்கு அன்வார் பயணம் மேற்கொள்கிறார்.
நாளை தொடங்கி, நவம்பர் 24 ஆம் தேதி வரையில் பிரதமரின் இந்த மூன்று நாடுகளில் பயணம் அமைந்திருக்கும் என்று பிரதமரின் பத்திரிக்கைச் செயலாளர் துங்கு நாஷ்ருல் அபைடா தெரிவித்துள்ளார்.








