கடந்த ஜனவரியில் இருந்து ஏற்பட்ட வெள்ளத்தால் பேரா விவசாயிகள் 2 இலட்சத்து 87 ஆயிரம் வெள்ளிக்கும் அதிகமான நட்டத்தைப் பதிவு செய்துள்ளனர்.
பேரா கிராமப்புற வளர்ச்சி, தோட்டம், விவசாயம், உணவுத் தொழில்துறை ஆட்சிக்குழு உறுப்பினர், டத்தோ முஹமாட் சொல்காஃப்லி ஹாருன் இது குறித்து தெரிவிக்கயில், இந்தத் தொகையானது 37 ஹெக்டேர் பரப்பளவில் உள்ள பல்வேறு வகையான விளைச்சல் பண்ணைகளுக்கு ஏற்பட்டச சேதத்தால் ஆனவை எனக் குறிப்பிட்டார்.
அனைத்து சேதங்கள் குறித்தும் மாநில வேளாண்மைத் துறைக்கு தெரிவிக்கப்பட்டு விட்டதாகவும் நெல் பயிர் பேரிடர் நிதி திபிதிபி மற்றும் வேளாண் உணவுத் திட்ட மறுவடிவமைப்பு நிதி ஆகியவற்றின் கீழ் உதவிக்கான விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
அக்டோபர் மாத நிலவரப்படி, மாநில அரசு வேளாண்மைத் துறை மூலம் 60 ஆயிரம் வெள்ளி மதிப்புள்ள 19 பேரிடர் நிவாரண விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
ஹுலு பேராக், ஹீலிர் பேராக்,எல்எம்எஸ், கெரியான், பெர்ராக் ஆகிய மாவட்டங்களில் வெள்ளத்தால் விளைச்சலுக்குச் சேதம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்த டத்தோ முஹமாட் சொல்கஃப்லி ஹாருன் நெல், நோளம், தர்ப்பூசணி, வாழை, செராய் ஆகியவை அழிந்ததாக தகவல் வெளியிட்டார்.







