Aug 6, 2026
Thisaigal NewsYouTube
முன்னாள் மாவட்ட போலீஸ் தலைவர் மீது லஞ்ச குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

முன்னாள் மாவட்ட போலீஸ் தலைவர் மீது லஞ்ச குற்றச்சாட்டு

Share:

கடந்த 2019 ஆம் ஆண்டுக்கும், 2022 ஆம் ஆண்டுக்கும் இடைப்பபட்ட கால கட்டத்தில் 70 ஆயிரத்து 600 வெள்ளி லஞ்சம் வாங்கியதாக பகாங், தெமர்லோ மாவட்ட முன்னாள் போலீஸ் தலைவர் மீது 46 லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

குவந்தான், செஷன்ஸ் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட 53 வயதான முகமது அசார் முகமட் யூசாஃப், தெமர்லோ மாவட்ட போலீஸ் தலைவர் என்ற முறையில் தமது அதிகாரத்துவ பணி தொடர்புடைய விவகாரங்களில் வங்கி பண மாற்ற நடவடிக்கையின் வாயிலாக இந்த லஞ்சத்தை பெற்றதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

குறைந்த பட்சம் 100 வெள்ளியிலிருந்து கூடிய பட்சம் 5 ஆயிரத்து 600 வெள்ளி வரையில் லஞ்சம் பெற்றதாக அவருக்கு எதிரான 47 குற்றச்சாட்டுகளில் தெரிவிக்கப்பட்டது. குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் 2 ஆண்டு சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே விதிக்க வகை செய்யும் 2009 ஆம் ஆண்டு லஞ்ச ஊழல் சட்டத்தின் கீழ் அந்த முன்னாள் மாவட்ட போலீஸ் தலைவர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

Related News

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130  லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130 லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி

கேளிக்கை மையங்களை இலக்காகக் கொண்ட போதைப்பொருள் கும்பல் வீழ்த்தப்பட்டது: தம்பதியர் உட்பட 7 பேர் கைது

கேளிக்கை மையங்களை இலக்காகக் கொண்ட போதைப்பொருள் கும்பல் வீழ்த்தப்பட்டது: தம்பதியர் உட்பட 7 பேர் கைது