Dec 19, 2025
Thisaigal NewsYouTube
மேம்பாலத்திலிருந்து குதிக்கப் போவதாக அச்சுறுத்திய நபர் காப்பாற்றப்பட்டார்
தற்போதைய செய்திகள்

மேம்பாலத்திலிருந்து குதிக்கப் போவதாக அச்சுறுத்திய நபர் காப்பாற்றப்பட்டார்

Share:

ஜார்ஜ்டவுன், டிசம்பர்.19-

இன்று மதியம் சுமார் 12.00 மணியளவில், பினாங்கில் உள்ள ஜாலான் மஸ்ஜித் நெகிரி மேம்பாலத்திலிருந்து குதித்து தற்கொலை செய்து கொள்ளப் போவதாக அச்சுறுத்திய நபர் காப்பாற்றப்பட்டுள்ளார்.

மேம்பாலத்தில் உள்ள "For how you live" என்ற விளம்பரப் பலகையின் அருகே அந்த நபர் நின்று கொண்டு இத்தகைய அச்சுறுத்தலை விடுத்தார்.

இந்தச் சம்பவத்தால் அந்தப் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கிரீன்லேன் மற்றும் அதைச் சுற்றியுள்ள சாலைகளில் வாகனங்கள் நீண்ட தூரம் ஸ்தம்பித்தன.

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸ் துறையினர் மற்றும் மீட்புக் குழுவினர் அந்த நபரை சமாதானப்படுத்தி கீழே இறக்கினர். இந்தச் சம்பவம் குறித்த காணொளிகள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் குறிப்பாக Penang Today போன்ற குழுக்களில் பகிரப்பட்டு வருகின்றன.

உங்களுக்கு அல்லது உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு மன உளைச்சல் அல்லது தற்கொலை எண்ணங்கள் இருந்தால், பின் வரும் எண்களைத் தொடர்பு கொள்ளலாம்:

• Befrienders Malaysia: 03-76272929

• Talian Kasih: 15999

Related News