ஷா ஆலாம், நவம்பர்.27-
வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு தங்களின் கடப்பிதழ் சேதமடைந்திருந்தால் அல்லது காணாமல் போயிருக்குமானால் அதனை மக்கள் இலவசமாக மாற்றிக் கொள்ளலாம் என்று மலேசிய குடிநுழைவுத்துறை அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் வெள்ளப் பேரிடர் ஏற்பட்ட நிலையில் பாதிக்கப்பட்ட மக்களின் சிரமத்தையும், துயரத்தையும் அறிந்து குடிநுழைவுத்துறை இந்தச் சலுகையை வழங்குவதாக அதன் தலைமை இயக்குநர் டத்தோ ஸாகாரியா ஷாபான் தெரிவித்தார்.
கடப்பிதழை மாற்றிக் கொள்ள விரும்பும் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்கள், கட்டாயமாக போலீஸ் புகாரின் நகலை இணைக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.








