Jul 28, 2026
Thisaigal NewsYouTube
தமிழ், சீன தாய்மொழிப்பள்ளிகள் மூடப்படாது பெரிக்காத்தான் நேஷனல் திட்டவட்டம்
தற்போதைய செய்திகள்

தமிழ், சீன தாய்மொழிப்பள்ளிகள் மூடப்படாது பெரிக்காத்தான் நேஷனல் திட்டவட்டம்

Share:

இந்நாட்டில் இயங்கி வரும் தமிழ், சீன தாய்மொழிப்பள்ளிகளை பெரிக்காத்தான் நேஷனல் ஒரு போதும் மூடாது என்று பெர்சத்து கட்சியின் இளைஞர் பிரிவுத் தலைவர் ஃபைசல் வான் அகமது கமால் உறுதி அளித்துள்ளார்.

அதேவேளையில் கோலகுபு பாரு சட்டமன்றத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளராக போட்டியிடும் பாங் சாக் தாவோ, தாய்மொழிப்பள்ளியில் படித்தவர் என்று மறைமுகமாக சிறுமைப்படுத்தி பேசியிருக்கும் பாசிர் மாஸ் நாடாளுமன்ற உறுப்பினர் அஹ்மத் ஷாரி-யின் செயலுக்காக பகிரங்க மன்னிப்பு கோருவதாக ஃபய்சல் வான் அஹ்மத் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ், சீன தாய்மொழிப்பள்ளிகளை பெரிக்காத்தான் நேஷனல் ஒரு போதும் எதிர்க்காது. மாறாக அப்பள்ளிகள் தேசிய பாடத்திட்டத்துடன் மேன்மையுறுவதை பெரிக்காத்தான் நேஷனல் முழுமையாக ஆதரிக்கும் என்று இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் ஃபய்சல் வான் அஹ்மத் இதனை தெரிவித்துள்ளார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்