Oct 2, 2026
Thisaigal NewsYouTube

ஆற்று நீரில் சிக்கி பலியான சுரேஸின் குடும்பத்தினருக்கு மாதம் 2,655 ரிங்கிட் – பெர்கேசோ அறிவிப்பு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
ஆற்று நீரில் சிக்கி பலியான சுரேஸின் குடும்பத்தினருக்கு மாதம் 2,655 ரிங்கிட் – பெர்கேசோ அறிவிப்பு

கோலாலம்பூர், நவம்பர்.29-

கடந்த வாரம் சுங்கை கிளாங் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு, 4 நாட்கள் தேடலுக்குப் பிறகு சடலமாக மீட்கப்பட்ட சுரேஸ் கமலநாதனின் குடும்பத்தினர், சமூக பாதுகாப்பு நிறுவனமான பெர்கேசோ நிதியைப் பெறத் தகுதி பெற்றுள்ளனர்.

இதனை பெர்கேசோ நிறுவனம் நேற்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் உறுதிப்படுத்தியுள்ளது.

37 வயதான சுரேஸ் கமலநாதன் குத்தகை நிறுவனம் ஒன்றில் மேற்பார்வையாளராக பணியாற்றி வந்த நிலையில், LINDUNG Perkerja என்ற தொழிலாளர் பாதுகாப்பு திட்டத்தில் இணைந்து முறையாகச் சந்தா செலுத்தி வந்துள்ளார்.

என்றாலும், கடந்த ஏப்ரல் மாதத்தோடு அவரது சந்தா தொகையானது செலுத்தப்படாமல் நின்று போன நிலையில், அக்டோபர் மாதம் வரையிலான மீதமுள்ள சந்தா தொகையை, சுரேஸ் பணியாற்றிய குத்தகை நிறுவனம் செலுத்தியது.

இதனையடுத்து, பெர்கேசோ திட்டத்தின் கீழ் சுரேசின் குடும்பத்தினரான அவரது மனைவிக்கும், அவரது 6 வயது மகனுக்கும் மாதந்தோறும் 2,655 ரிங்கிட்டும், சுரேசின் இறுதிச் சடங்கு செலவிற்காக 3000 ரிங்கிட்டும் வழங்கப்படும் என்று பெர்கேசோ நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →