எதிர்வரும் 2026இல் இளைஞர்களின் வயது வரம்பு 30 ஆக நடப்புக்கு வருகிறது என இளைஞர் விளையாட்டு அமைச்சர் ஹான்னா யொ தெரிவித்துள்ளார்.
தற்போது இளைஞர்களின் வயது அதிகபட்சமாக 40 என நடப்பில் இருக்கிறது.
இளைஞர் அமைப்புகள், இளைஞர் மேம்பாடு சட்டத்தின்படி இந்த வயது வரம்பு அமலாக்கம் காண உள்ளது என அவர் மேலும் சொன்னார்.
மேலும், இளைஞர் அமைப்புகள் அதன் தலைவர் பதவி காலம் அதிகபட்சமாக 4 ஆண்டுகள் என மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் சொன்னார்.








