Feb 8, 2026
Thisaigal NewsYouTube
பாகோ காண்டாமரக் காடுகளில் தீ: 54 ஹெக்டர் பரப்பளவிலான நிலங்கள் பாதிப்பு
தற்போதைய செய்திகள்

பாகோ காண்டாமரக் காடுகளில் தீ: 54 ஹெக்டர் பரப்பளவிலான நிலங்கள் பாதிப்பு

Share:

பாகோ, பிப்ரவரி.08-

ஜோகூர், பாகோவில் உள்ள Jorak பகுதியில் சுமார் 54 ஹெக்டர் பரப்பளவிலான கெலாம் சதுப்பு நிலக் காடுகளில் புதிய தீப்பரவல் ஏற்பட்டுள்ளதைக் தீயணைப்புத் துறை கண்டறிந்துள்ளது. ஏற்கனவே அருகிலுள்ள ஆயர் ஹீத்தாமில் உள்ள ஜோகூர் தோட்ட உரிமையாளர்கள் சங்கத்தின் தோட்டப் பகுதியில் 114 ஹெக்டர் நிலங்களில் பற்றி எரியும் தீயை அணைக்கும் பணி ஒன்பதாவது நாளாகத் தொடர்ந்து வரும் வேளையில், இந்த புதிய தீ விபத்து தீயணைப்பு வீரர்களுக்குப் பெரும் சவாலாக அமைந்துள்ளதாக ஜோகூர் தீயணைப்பு – மீட்புப் படையின் பகுதி 4இன் தலைவர் நோர்ஷூஹாடா அம்சாரி தெரிவித்தார்.

தீயணைப்புத் துறையினர் ஒரு ஹெலிகாப்டர் மூலம் சுமார் 32 ஆயிரம் லிட்டர் நீரை வான்வழியாகப் பாய்ச்சித் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதோடு, இன்று அதிகாலை பெய்த மழையினால் தீயின் வீரியம் சற்று குறைந்துள்ளது. குறைந்த எண்ணிக்கையிலான தீயணைப்பு வீரர்களைக் கொண்டு இரண்டு இடங்களிலும் தீயை அணைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதால், இப்பணிகளைத் துரிதப்படுத்தக் கூடுதல் கவனத்துடன் தீயணைப்புப் படை செயல்பட்டு வருகிறது.

Related News