2006 ஆம் ஆண்டு நிகழ்ந்த மங்கோலியா முன்னாள் மாடல் அழகி அல்தான்துயா ஷாரிபு கொலை தொடர்பில் தமது வாயை மூடுவதற்கு முக்கிய அரசியவாதி ஒருவரின் வழக்கறிஞர் மூலம் தாம் பத்து லட்சம் வெள்ளியை பெற்றதாக இக்கொலை வழக்கில் மரணத் தண்டனை விதிக்கப்பட்ட அரச மலேசிய போலீஸ் படையைச் சேர்ந்த முன்னாள் அதிரடி போலீஸ்காரர் சிருல் அஸ்ஹர் உமர் தெரிவித்துள்ளார்.
குடிநுழைவு சட்டத்தின் கீழ் ஆஸ்திரேலியாவில் சிறைத் தண்டனை அனுபவித்து வந்த அந்த முன்னாள் போலீஸ் அதிகாரி, கடந்த வாரம் தனது விடுதலைக்கு பிறகு அல்ஜீரியா தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் இதனை தெரிவித்தார்.
ஆஸ்திரேலியாவில் சிறைத் தண்டனை அனுபவித்து வந்த காலகட்டத்தில் ஒரு வழக்கறிஞர் மூலம் தாம் 10 லட்சம் வெள்ளியை பெற்றதை சிருள் ஒப்புக்கொண்டார்.
அல்தான்துய்யா கொலை விவகாரத்தில் குறிப்பிட்ட தரப்பினரால் தாம் பலிகடாவாக்கப்பட்டுள்ளதாக மலேசியா திரும்ப மறுத்து விட்ட சிருள் தமது பேட்டியில் தெரிவித்துள்ளார்.








