கோலாலம்பூர், ஜூலை.21-
2025 ஆம் ஆண்டு பெர்னாமா சட்டத் திருத்தம் , நாடாளுமன்றச் சேவைகள் சட்டம் 2025 மற்றும் மலேசிய ஊடக மன்றச் சட்டம் 2025 ஆகியவை மலேசிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிமிடமிருந்து அரச அங்கீகாரத்தைப் பெற்ற 20 சட்டங்களில் அடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் 2025, சபா தொழிலாளர் ஆணைச் சட்டத் திருத்தம் 2025, சரவாக் தொழிலாளர் ஆணைச் சட்டத் திருத்தம் 2025, லாபுவான் நிறுவனங்கள் சட்டத் திருத்தம் 2025, மற்றும் லாபுவான் அறக்கட்டளைகள் சட்டத் திருத்தம் 2025 ஆகியவை மான்னரின் அங்கீகாரத்தைப் பெற்ற பிற சட்டங்களில் அடங்கும் என்று நாடாளுமன்ற மக்களவை சபா நாயகர் டான் ஶ்ரீ ஜொஹாரி அப்துல் தெரிவித்துள்ளார்.








