நாட்டில் உண்மைக்கு எதிராக செயல்பட்டு, இன வெறியை தூண்டும் சில குரல்களை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இத்தகைய அணுகுமுறைக்கு எதிராக நாட்டின் இளைஞர்கள் உறுதியாக நிற்க வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
மேலும், செயற்கை நுண்ணறிவு போன்ற தொழில்நுட்ப முன்னேற்றங்கள் இருந்தாலும் கூட, இளைஞர்களிடம் நல்ல குண நலன்கள் மற்றும் சமூக பொறுப்புணர்வு இல்லையெனில் அதற்கு அர்த்தமே இல்லை என்றும் அன்வார் குறிப்பிட்டுள்ளார்.
மனிதநேயம் குறைந்து விட்டால் செயற்கை நுண்ணறிவுக்கு என்ன அர்த்தம்? என்று கேள்வி எழுப்பியுள்ள அன்வார், நாம் மனித நேயத்தையும், கண்ணியத்தையும் உயர்த்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
ஒழுக்கம், பண்பாடு மற்றும் நல்ல உறவுகள் அவசியம் என்பதோடு, ஒருவருக்கொருவர் வெறுப்பு மற்றும் அவமதிப்பை நீக்க வேண்டும் என்றும் அன்வார் தெரிவித்துள்ளார்.








