மலாக்கா, நவம்பர்.19-
மலாக்கா, ஹங் ஜெபாட் அரங்கத்தின் முன்புறம் ஆயுததத்தடன் சிலர் பிடிபட்டதாக சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் காணொளி உண்மை அல்ல என்று மலாக்கா தெங்கா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி கிரிஸ்டபர் பாதிட் தெரிவித்தார்.
விஐபி பிரமுகர் ஒருவர் பணம் கேட்டு பிணையாகப் பிடிக்கப்பட்டு இருப்பாரேயானால் அவரை எவ்வாறு மீட்பது என்பது குறித்து போலீஸ் படையும், ஆயுதப்படையும் இணைந்து, மாதிரி செயல்முறையில் ஈடுபட்ட காணொளியே தவிர உண்மையான சம்பவம் அல்ல என்று ஏசிபி கிரிஸ்டபர் பாதிட் விளக்கம் அளித்தார்.
போலீஸ் துறைக்கும், ஆயுதப்படைக்கும் இடையிலான ஒருமித்த ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஒரு பகுதியாக இந்த பயிற்சி நடைபெற்றதாக அவர் தெளிவுபடுத்தினார்.








