Jul 31, 2026
Thisaigal NewsYouTube
முன்னாள் எம்.பி.யிடம் போலீசார் வாக்குமூலம்
தற்போதைய செய்திகள்

முன்னாள் எம்.பி.யிடம் போலீசார் வாக்குமூலம்

Share:

பெட்டாலிங் ஜெயா,ஆகஸ்ட் 26-

பெட்டாலிங் ஜெயா, கோட்டா டமன்சாரா- வில் உள்ள பசராய ஒன்றில் பணியாற்றி வரும் பெண்ணுக்கு பாலியல் தொல்லைக் கொடுத்து வந்ததாக கூறப்படும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரிடம் போலீசார் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.

பாலியல் தொல்லை தொடர்பில் அந்த முன்னாள் எம்.பி. உட்பட இதுவரையில் 13 பேரிடம் போலீசார் வாக்குமூலம் பதிவு செய்துள்ளதாக பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர்ஏசிபி ஷாருல்நிஜாம் ஜாபர் தெரிவித்தார்.

தற்போது அரசாங்க சார்பு நிறுவனம் ஒன்றில் நிர்வாகம் சாராத இயக்குநரான பணியாற்றி வரும் அந்த முன்னாள் எம்.பி ./ சம்பந்தப்பட்ட வர்த்தகத் தளத்தில் 20 வயது பெண் பணியாளரிடம் இரண்டு முறை பாலியல் ரீதியாக இடையூறு ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.

Related News