Dec 2, 2025
Thisaigal NewsYouTube
கேமரன் மலை இருளில் மூழ்கியது
தற்போதைய செய்திகள்

கேமரன் மலை இருளில் மூழ்கியது

Share:

நாட்டின் பிரதான சுற்றுலா மலைவாசஸ்தலமான கேமரன் மலையில் இன்று மதியம் மின்சார விநியோகத் தடை ஏற்பட்டுள்ளது. இதனால், அந்த மலை வாசஸ்தலத்தில் உள்ள வீடுகள் மற்றும் ஹோட்டல்கள் இருளில் மூழ்கியது.

பிந்தாங்கில் உள்ள பிரதான மின் விநியோக நிலையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக்கோளாறு காரணமாக மின் விநியோகத்தில் தடை ஏற்பட்டதாக தெனாகா நேஷனல் பெர்ஹாட் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட கோளாற்றை சீர்ப்படுத்த டி.என்.பி. ஊழியர்கள் முழு வீச்சில் சீரமைப்புப்பணியில் ஈடுபட்டு வருவதாக அந்த மின்சார விநியோக நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

Related News