ஜோகூர் பாரு, செப்டம்பர்.28-
ஜோகூர், லார்கின் பகுதியில் அதிகாலை 2 மணி அளவில், ஜோகூர் குடிநுழைவுத் துறை நடத்திய அதிரடிச் சோதனையில் 104 சட்டவிரோதக் குடியேறிகள் கைது செய்யப்பட்டனர். இதில், ஒன்பது கைக்குழந்தைகளும் சிறுவர்களும் அடங்குவர். இரகசியத் தகவல்களும் பொதுமக்களின் புகாரையும் அடுத்து நடத்தப்பட்ட இந்த இரண்டு மணி நேரச் சோதனையில், பெரும்பாலானோர் இந்தோனேசியர்கள் கைது செய்யப்பட்டார்கள் என ஜொகூர் மாநில குடிநுழைவுத் துறையின் தலைமை இயக்குநர் டத்தோ முகமட் ருஸ்டி முகமட் டாருஸ் தெரிவித்தார். செல்லுபடியாகும் ஆவணங்கள் இன்றி அதிக நாட்கள் தங்கியது உள்ளிட்ட பல்வேறு குற்றங்களுக்காக இவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக முகமட் ருஸ்டி தெரிவித்தார்.








