இன்று மாலையில் பெய்த கனத்த மழையில் கோலாலம்பூரில் பல்வேறு பகுதிகளில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது. இதனால், பொது மக்களும் , வாகனமோட்டிகளும் பெரும் அவதிக்குள்ளாகினர்.
கோலாலம்பூர் மையப்பகுதியான கம்போங் பெரியோக், கம்போங் பாரு ஆகியவை கடுமையாக பாதிக்கப்பட்டதாக தீயணைப்பு, மீட்புப்படையினர் தெரிவித்தனர்.
தங்கள் வீடுகளில் வெள்ளம் சூழ்ந்த நிலையில் பெரும் பரிதவிப்புக்கு ஆளான மாது ஒருவரை சக்கர வண்டியுடன் மீட்புப்படையினர் வெள்ளத்தின் மத்தியில் காப்பாற்றும் காட்சி சமூக வளைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருவதை காண முடிகிறது.
இன்று மாலை 4.30 மணியளவில் பெய்யத் தொடங்கிய கனத்த மழை சில மணி நேரமே நீடித்த நிலையில் மாநகரின் பல்வேறு பகுதிகளில் நீரின் மட்டம் 0.2 மீட்டர் அளவில் உயந்ததாக தெரிவிக்கப்பட்டது.







