புத்ராஜெயா, ஜனவரி.20-
மலேசியாவில் தொடக்கப்பள்ளிகளில் 4-ஆம் ஆண்டு மற்றும் இடைநிலைப்பள்ளிகளில் படிவம் 3 மாணவர்களுக்குப் புதிய தரப்படுத்தப்பட்ட மதிப்பீட்டுத் தேர்வு அறிமுகப்படுத்தப்படும் என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று அறிவித்துள்ளார்.
இன்று புத்ராஜெயாவில் 'தேசிய கல்வித் திட்டம் 2026-2035' தொடக்க விழாவில் பேசிய பிரதமர், இந்த புதிய மதிப்பீட்டுத் தேர்வு 'மலேசிய கற்றல் மெட்ரிக்ஸ்' (Malaysian Learning Matrix) என்று அழைக்கப்படும் என்றார்.
இத்தேர்வில் மலாய் மொழி, ஆங்கிலம், அறிவியல் மற்றும் கணிதம் ஆகிய நான்கு பாடங்கள் இடம் பெறும். 2027-ஆம் ஆண்டு முதல் இத்தேர்வு அமல்படுத்தப்படும். இதில் மேற்கண்ட நான்கு பாடங்களுடன் 'வரலாறு' பாடமும் கூடுதலாகச் சேர்க்கப்படும்.
இந்தத் தேர்வுகளை மலேசியத் தேர்வு வாரியமான Lembaga Peperiksaan Malaysia நேரடியாக நடத்தும் என்றும் பிரதமர் உறுதிப்படுத்தினார்.








