Sep 26, 2026
Thisaigal NewsYouTube
14 வயது மாணவிக்கு பாலியல் பலத்காரம்: இரு சிறுவர்கள் உட்பட மூவர் கைது
தற்போதைய செய்திகள்

14 வயது மாணவிக்கு பாலியல் பலத்காரம்: இரு சிறுவர்கள் உட்பட மூவர் கைது

Share:

14 வயது பள்ளி மாணவிக்கு எதிராகப் பாலியல் பலத்காரத்தில் ஈடுபட்டதாக, பதின்ம வயதுடைய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு நவம்பர் முதல் பிப்ரவரி வரை பல்வேறு இடங்களில் அந்த மூவரும் இத்தகைய பாலியல் நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரின் அடிப்படையில், இருவர், நேற்று தாவாவ், கம்போங் ஜாவாவில் கைது செய்யப்பட்டனர். . 17 வயதுடைய மற்றொரு நபர், போலீஸ் தலைமையகத்திற்கு வரவழைக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

பள்ளி ஒன்றில் சம்பந்தப்பட்ட மாணவியைக் கட்டாயப்படுத்தி பலவந்த செயலில் ஈடுபடுத்தியதாக கூறப்படும் மற்றொரு நபர் குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.

Related News