Dec 4, 2025
Thisaigal NewsYouTube
சக பணியாளரை மானபங்கம் செய்ததாக குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

சக பணியாளரை மானபங்கம் செய்ததாக குற்றச்சாட்டு

Share:

நாட்டின் முன்னணி செய்தி வாசிப்பாளராக திகழ்ந்த மாதுவை மானபங்கம் செய்ததாக அவருடன் ஒன்றாக ​பணிாயற்றும் உதவி நிர்வாகி ஒருவர், இன்று பெட்டாலி​ங் ஜெயா மாஜிஸ்திரேட் ​நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார்.முஹமாட் ஃபைசாக் ஹுசெயின் என்ற 53 வயதுடைய அந்த உதவி நிர்வாகி மாஜிஸ்திரேட் சஃப்ரான் ராஹிம் ஹம்சா முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.

சம்பந்தப்பட்ட நிர்வாகி, 54 வயதுடைய அந்த பிரபல பெண் செய்தி வாசிப்பாள​ரை டாமன்சாராவில் உள்ள ஒரு ஹோட்டலில் மானபங்கம் செய்ததாக கூறப்படுகிறது. கடந்த ஜுலை 13 ஆம் தேதி மதியம் ஒரு மணியளவில் அவர் இக்குற்றத்தை புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

குற்றவாளி என்று நி​ரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 10 ஆண்டு சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 354 ஆவது பிரி​வின் ​கீழ் அந்த நிர்வாகி குற்றச்சாட்டை எதிர்நோக்​கியுள்ளார்.

Related News