கோலாலம்பூர், அக்டோபர்.16-
மலேசியாவில் அனைத்து சமூக ஊடகங்களிலும் மின்னணு அடையாளச் சரிபார்ப்பு முறை கட்டாயமாக்கப்படும் என்று தகவல் தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபாமி ஃபாட்சீல் தெரிவித்துள்ளார்.
13 வயதுக்குக் குறைவான குழந்தைகள் சமூக ஊடகக் கணக்குகள் உருவாக்குவதைத் தடுக்கவும், இணையப் பாதுகாப்பை உறுதிச் செய்யவும் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அடுத்த வாரம் சமூக ஊடக நிறுவனங்களுடன் சந்திப்பு நடத்தி, அடையாளச் சரிபார்ப்பை அமல்படுத்தப்படுவதற்கான உடனடி நடவடிக்கைகள் குறித்து கலந்தாலோசிக்கப்படும் என்றும் ஃபாமி ஃபாட்சீல் தெரிவித்துள்ளார்.
குழந்தைகளின் பாதுகாப்பு மட்டுமல்லாமல், இணைய மோசடிகள், சூதாட்டம் மற்றும் போலியான விளம்பரங்கள் போன்றவைகளைக் கட்டுப்படுத்தவும் இத்திட்டம் முக்கியப் பங்கு வகிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.








