கோலாலம்பூர், அக்டோபர்.25-
பிடிபிடிஎன் கடன்களைத் திருப்பிச் செலுத்துவதில் சிரமங்களை எதிர்கொள்ளும் தனிநபர்கள், தங்களது கடனைத் திருப்பிச் செலுத்தும் அட்டவணையை மறுசீரமைத்துக் கொள்ளும்படி உயர்க்கல்வி அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் ஸம்ரி அப்துல் காடீர் தெரிவித்துள்ளார்.
நிதி நெருக்கடி காரணமாக உண்மையிலேயே கடனைத் திருப்பிச் செலுத்த இயலாதவர்களுக்கு அரசாங்கம் கருணையுடன் கூடிய இந்த அணுகுமுறையை எடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதே வேளையில், சிலர் தொடக்கத்திலிருந்தே, கடனைத் திருப்பிச் செலுத்துவதில் ஆர்வமின்றி இருப்பதாகக் குறிப்பிட்டுள்ள ஸம்ரி, அவர்களைத் திரும்ப செலுத்த வைப்பதில் அரசாங்கம் சவால்களை எதிர்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
என்றாலும், 2026 பட்ஜெட் அறிவிப்பில், பிடிபிடிஎன் தொடர்பில் பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட பிறகு, கடனைத் திருப்பிச் செலுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.








