பெட்டாலிங் ஜெயா, அக்டோபர்.18-
நேற்று விடுதிக் கட்டிடத்தில் இருந்து விழுந்து மரணமடைந்த மலாயா பல்கலைக்கழக மாணவரின் மரணத்தில் குற்றச்செயல்கள் எதுவும் இல்லை என்பதை போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
பிரேதப் பரிசோதனை முடிவில், 22 வயதான அம்மாணவர், உயரத்திலிருந்து விழுந்ததில் ஏற்பட்ட கடுமையான தலைக்காயம் காரணமாக, உயிரிழந்தது உறுதிச் செய்யப்பட்டுள்ளது.
கழுத்து நெறித்ததற்கான அடையாளமோ அல்லது வேறு குற்றச்செயல்களுக்கான ஆதரங்களோ எதுவும் இல்லை என்று பிரேதப் பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பெட்டாலிங் ஜெயா காவல்துறைத் தலைவர் ஷாம்சூடின் மாமாட் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், அம்மாணவரின் உடல் இன்று அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.