Dec 4, 2025
Thisaigal NewsYouTube
குடிநுழைவு அதிகாரியைக் காயப்படுத்திய சீன நாட்டுப் பெண்ணுக்கு ஒரு மாதச் சிறைத் தண்டனை
தற்போதைய செய்திகள்

குடிநுழைவு அதிகாரியைக் காயப்படுத்திய சீன நாட்டுப் பெண்ணுக்கு ஒரு மாதச் சிறைத் தண்டனை

Share:

சிப்பாங், ஆகஸ்ட்.18-

கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் முதலாவது முனையத்தில் குடிநுழைவு அதிகாரியைக் காயப்படுத்தியதாகக் குற்றத்தை ஒப்புக் கொண்ட சீன நாட்டுப் பெண்ணுக்கு சிப்பாங் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று ஒரு மாத சிறைத் தண்டனையும் 2 ஆயிரம் ரிங்கிட் அபராதமும் விதித்தது.

நீதிமன்ற மொழிபெயர்ப்பாளரின் உதவியுடன் மாண்டரின் மொழியில் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட போது 31 வயதான ஃபாங் ஃபூயுவான் என்ற அந்த அந்நிய நாட்டுப் பெண் குற்றத்தை ஒப்புக் கொண்டதை அடுத்து, மாஜிஸ்திரேட் கைராதூல் அனிமா ஜெலானி மேற்கண்ட தீர்ப்பை வழங்கினார்.

கடந்த புதன்கிழமை இரவு 8 மணிக்கு கேஎல்ஐஏ முனையம் 1 இல் விமானப் புறப்பாடு பகுதியில் உள்ள நான்காவது குடிநுழைவு அதிகாரி முகப்பிடத்தில் அந்த சீன நாட்டுப் பெண் இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

Related News