Jul 18, 2026
Thisaigal NewsYouTube
வளர்ப்புப் நாய்களுக்குக் கட்டாயம் உரிமம் இருக்க வேண்டும்
தற்போதைய செய்திகள்

வளர்ப்புப் நாய்களுக்குக் கட்டாயம் உரிமம் இருக்க வேண்டும்

Share:

கூலிம் மாவட்டத்தில் வளர்ப்பு மற்றும் கைவிடப்பட்டுள்ள பிராணுகளுக்குக் கட்டாயம் உரிமம் எடுக்க வேண்டும் என்று கூலிம் மாவட்ட நகராண்மை கழகத்தின் தலைமை அதிகாரி டத்தோ ஹஜி ஹெல்மி யூசோப் தெரிவித்தார். 2026 ஆம் ஆண்டில் கூலிம் நகராண்மை கழகம் வளர்ப்புப் பிராணிகள் மற்றும் கைவிடப்பட்டுள்ள பிராணிகளுக்குக் குறிப்பாக நாய்களுக்குப் உரிமமும் பாதுக்காப்பு முக்கியத்துவ விழிப்புணர்வுப் பிரசாரத்தில் இறங்கியிருப்பத்தாக ஹெல்மி குறிப்பிட்டார்.

மேலும் அவர் கூறுகையில், கூலிம் நகராண்மை கழக அதிகாரிகள் கூலிம் சுற்று வட்டாரங்களில் பொதுமக்களை நேரில் சந்தித்து வளர்ப்புப் பிராணிகளான நாய்கள் மற்றும் இதர செல்லப்பிராணிகளின் உரிமங்கள் பற்றியும் அதன் முக்கியத்துவம் பற்றியும் விளக்கமளித்து வருவத்தாக தெரிவித்தார்.

இந்த வளர்ப்புப் பிராணிகளின் உரிமத்தை இணையம் வழி விண்ணப்பிக்கலாம் அதன் வழிக்காட்டலையும் அதிகாரிகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.இனி வளர்ப்புப் பிராணிகள் பராமரிக்கும் வழிமுறைகளை அதன் உரிமையாளர்கள் அறிந்துக் கொள்வதற்கு கூலிம் நகராண்மை கழகத்தின் பிரச்சாரம் துணைப் புரியும் என்றார் டத்தோ ஹஜி ஹெல்மி யூசோப்.

வளர்ப்புப் பிராணிகளின் உரிமம் பெறும் முக்கிய நோக்கமே பிராணிகளின் நலன் கருத்துவத்தோடு பாதுக்காப்புமில்லாமல் பிராணிகள் சுற்றி திரிவத்தற்கு அனுமதில்லை என்பதை அனைவரும் தெரிந்துக் கொள்ள வேண்டும்.அதுடன் சமூகத்தின் பாதுக்காப்பு மற்றும் ஆரோக்கியமான வாழ்கை முறை ஒவ்வொருக்கும் மிக அவசியமாகும்.

ஆகவே, நாய்கள் மட்டுமின்றி மற்ற பிராணிகளுக்கு உணவு அளிப்பது மட்டும் அன்பு இல்லை, அப்பிராணிகளை அன்புடனும் பாதுக்காப்புடனும் வளர்ப்பதும் அன்புத்தான்.இதனை உணர்த்துவதே இப்பிரச்சாரத்தின் கருத்தாகும் என்றார் ஹெல்மி யூசோப்.பொதுமக்கள் இப்பிராச்சாரத்தின் முழுமையான தகவலையும் அதன் விண்ணப்பத்தையும் கூலிம் நகராண்மை கழகதிடம் கேட்டு அறிந்துக் கொள்ளலாம்.

Related News