Jun 15, 2026
Thisaigal NewsYouTube
 புக்கிட் கியாரா ரூமா பாஞ்சாங் மக்களிள் பிரச்னைக்கு  ‘வரலாற்றுச் சிறப்புமிக்க’ தீர்வு
தற்போதைய செய்திகள்

புக்கிட் கியாரா ரூமா பாஞ்சாங் மக்களிள் பிரச்னைக்கு ‘வரலாற்றுச் சிறப்புமிக்க’ தீர்வு

Share:

கோலாலம்பூர் புக்கிட் கியாராவில் நீண்டகாலமாக தீர்க்கப்படாமல் இருந்த வந்த ரூமா பாஞ்சாங் மக்களின் வீட்டுப்பிரச்னைக்கு வரலாற்றுப்பூர்வமான தீர்வு காணப்பட்டுள்ளது. ரூமா பாஞ்சாங் மக்களின் வீடமைப்புத்திட்டத்தை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று அதிகாரப்பூர்மாக தொடக்கி வைத்தார்.

இதன் மூலம் 98 குடும்பங்களின் 44 ஆண்டுகாலக் காத்திருப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்திட்டத்தின் பூமி பூஜை விழாவில் பேசிய பிரதமர் அன்வார் , இந்த திருப்புமுனையை ‘வரலாற்றுச் சிறப்புமிக்கது’ என வர்ணித்தார். மேலும், நாடு எவ்வாறு நிர்வகிக்கப்பட வேண்டும் என்பதற்கு இதுவொரு சிறந்த முன்மாதிரி என்றும் அவர் குறிப்பிட்டார்.

புதிய வீடுகளுக்குக் குடிபெயர்ந்த பிறகு, மக்கள் கூடுதல் செலவுகளால் சுமைக்குள்ளாகக் கூடாது என்பதற்காக, அவர்களின் பராமரிப்புச் செலவுகளை மானியமாக வழங்க அரசாங்கம் 1 மில்லியன் ரிங்கிட்டை ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் பிரதமர் அறிவித்தார். இந்த மானியம் குறைந்தது மூன்று ஆண்டுகளுக்குப் பராமரிப்புச் செலவுகளை ஈடுகட்டப் பயன்படும். இந்நிகழ்வில் கூட்டரசு பிரதேசத்திற்கான பிரதமர் துறை அமைச்சர் ஹன்னா இயோவும் கலந்து கொண்டார்.

Related News

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

 ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்

ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்

மத நிலையை உறுதிப்படுத்தக் கோரும் JPN நிபந்தனைக்கு எதிராகப் பெண் நீதிமன்றத்தில் வழக்கு

மத நிலையை உறுதிப்படுத்தக் கோரும் JPN நிபந்தனைக்கு எதிராகப் பெண் நீதிமன்றத்தில் வழக்கு