Dec 2, 2025
Thisaigal NewsYouTube
15 பள்ளிகள் பாதிப்பு
தற்போதைய செய்திகள்

15 பள்ளிகள் பாதிப்பு

Share:

கோலாலம்பூர் மாநகரில் நேற்று பலத்த காற்றுடன் பெய்த கனத்த மழையில், 15 பள்ளிகள் கடுமையாக பதிக்கப்பட்ட வேளையில், அதன் உள்கட்டமைப்புகள் பெருமளவில் சேதமடைந்துள்ளன.

டேசா பெர்டானா இடைநிலைப்பள்ளி, ஶ்ரீ திதிவங்சா இடைநிலைப்பள்ளி, தாமான் மெலாத்தி இடைநிலைப்பள்ளி, ஜிங்ஜாங் இடைநிலைப்பள்ளி என மொத்தம் 15 பள்ளிகள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாக கோலாலம்பூர் பொதுப்பணித் துறை அறிவித்துள்ளது.

கனத்த மழையில், மரங்கள் வேரோடு பெயர்த்துக் கொண்டு பள்ளியின் கூரைகள் மற்றும் சுவர்கள் மீது சாய்ந்ததில், அவை சேதமடைந்ததாக பொதுப்பணித்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ அலேக்சாண்டார் நந்தா லிங்கி தெரிவித்துள்ளார்.

சம்பந்தப்பட்ட அனைத்து பள்ளிகளிலும் ஏற்பட்டுள்ள சேதத்தின் வகை மற்றும் அதன் அளவைக் கண்டறிய கோலாலம்பூர் பொதுப்பணித் துறை அது தொடர்பான ஆய்வையும் விசாரணையையும் மேற்கொண்டு வருவதாக அலேக்சாண்டார் நந்தா குறிப்பிட்டார்.

Related News