கோலாலம்பூர், ஆகஸ்ட்.22-
மாணவி ஸாரா கைரினாவின் மரண வழக்கில் உண்மைக்கு மாறான தகவல்களைப் பரப்பும் சிலரின் போக்கைக் கண்டித்துள்ளார் காவல்துறைத் தலைவர் டத்தோ ஶ்ரீ முகமட் காலிட் இஸ்மாயில். சமூக ஊடகங்களில் தனிப்பட்ட பிரபலத்திற்காகப் போலியான தகவல்களையும், காணொளிகளையும் பரப்புபவர்கள், காவல்துறையின் விசாரணையில் குழப்பத்தையும், தேவையற்ற சிக்கல்களையும் ஏற்படுத்துவதாக அவர் எச்சரித்தார்.
இது போன்ற செயல்கள் பொதுமக்களிடையே அச்சத்தையும், தவறான புரிதலையும் உண்டாக்கி, அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் என்றும் அவர் சுட்டிக் காட்டினார். சட்டப்படியான வழியில் விசாரணை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்த முகமட் காலிட் இஸ்மாயில், பொதுமக்கள் காவல்துறையின் செயல்பாடுகளுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.








