Oct 10, 2026
Thisaigal NewsYouTube

கட்டுமானத் தளத்தில் எட்டாவது மாடியிலிருந்து கீழே விழுந்து சர்வேயர் மரணம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
கட்டுமானத் தளத்தில் எட்டாவது மாடியிலிருந்து கீழே விழுந்து சர்வேயர் மரணம்

புக்கிட் மெர்தாஜாம், ஜூன்.06-

கட்டுமானத் தளத்தில் எட்டாவது மாடியின் லிப்டு குழியிலிருந்து கீழே விழுந்து அளவையாளர் ஒருவர் மரணமுற்றார்.

இந்தச் சம்பவம் நேற்று காலை 10.30 மணியளவில் பினாங்கு புக்கிட் மெர்தாஜாமில் உள்ள கட்டுமானத் தளத்தில் நிகழ்ந்தது. அந்த சர்வேயர், எட்டாவது மாடியியிலிருந்து 27 மீட்டர் உயரத்தில் கீழே விழுந்ததாக நம்பப்படுகிறது.
எட்டாவது மாடியில் மின்தூக்கி பொருத்துவதற்காக அளவிடும் பணியில் அவர் ஈடுபட்டு இருந்த போது இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.

எட்டாவது மாடியின் லிப்டு குழிக்கு அருகில் யாரும் சென்றடையாமல் இருப்பதற்கு போதுமான தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் அவை போதவில்லை என்பது தாங்கள் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது என்று பினாங்கு மாநில சுகாதார மற்றும் வேலையிட பாதுகாப்பு இலாகாவின் இயக்குநர் ஹைரோஸி அஸ்ரி தெரிவித்தார்.

41 வயது சர்வேயர், கடும் காயங்களுடன் சம்பவ இடத்திலேயே மாண்டார். இந்த விபத்து தொடர்பான விசாரணை முடியும் வரையில் கட்டுமானப் பணிகளை நிறுத்தும்படி உத்தரவிடப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
முதியோர் இல்லத்தின் மீது பாரந்தூக்கி கவிழ்ந்து விபத்து; முதியவர் காயம்

முதியோர் இல்லத்தின் மீது பாரந்தூக்கி கவிழ்ந்து விபத்து; முதியவர் காயம்

மனநலத்திற்கும் முக்கியத்துவம் அளியுங்கள்; உதவி கேட்கத் தயங்க வேண்டாம் – அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல்

மனநலத்திற்கும் முக்கியத்துவம் அளியுங்கள்; உதவி கேட்கத் தயங்க வேண்டாம் – அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல்

பாசீர் கூடாங்கில் 83 டன் மங்கோலிய விலங்குக் கொழுப்பு எண்ணெய் பறிமுதல்

பாசீர் கூடாங்கில் 83 டன் மங்கோலிய விலங்குக் கொழுப்பு எண்ணெய் பறிமுதல்

2027 வரவு செலவுத் திட்டம் மலேசியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூக நீதியை உறுதிப்படுத்தும்: அன்வார் திட்டவட்டம்

2027 வரவு செலவுத் திட்டம் மலேசியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூக நீதியை உறுதிப்படுத்தும்: அன்வார் திட்டவட்டம்

மூத்த அதிகாரி மீது 3.5 லட்சம் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு: சிறப்பு குழு அமைக்கிறது எஸ்பிஆர்எம்

மூத்த அதிகாரி மீது 3.5 லட்சம் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு: சிறப்பு குழு அமைக்கிறது எஸ்பிஆர்எம்

2027 மடானி வரவு செலவுத் திட்டம்: இந்தியச் சமுதாயமும் பயனடையும் என அமைச்சர் ரமணன் நம்பிக்கை

2027 மடானி வரவு செலவுத் திட்டம்: இந்தியச் சமுதாயமும் பயனடையும் என அமைச்சர் ரமணன் நம்பிக்கை